2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

அனர்த்த வரைபடம் வரைவது தொடர்பில் கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்த வரைபடம் வரைவது தொடர்பில் மாவட்ட செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை கலந்துரையாடப்பட்டது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் உலக வங்கியின் உதவியுடன் அனர்த்த வரைபடங்கள் வரையும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன்,  உலக வங்கியின் பிரதிநிதி மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர், அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் உட்பட  பலர் கலந்துகொண்டனர்.

 மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் தயாரிக்கப்பட்ட மாதிரி அனர்த்த வரைபடம் தொடர்பிலும்  ஆராயப்பட்டது.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ பூகோள தகவல் வரைபடம் தயாரிப்பது தொடர்பான செயற்றிட்டத்தின் முதற்கட்டம் பூர்த்தியடைந்த நிலையில், அதை அறிமுகப்படுத்திய மற்றும் அதற்கு பங்களிப்புச் செய்த உத்தியோகத்தர்களுக்கு  சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இலங்கையில் முதலாவதாக உலக வங்கியினால் மட்டக்களப்பு மாவட்டம் தெரிவுசெய்யப்பட்டு இத்திட்டம் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த பூகோள தகவல் வரைபட வேலைகள் மண்முனை வடக்கில் நிறைவடைந்ததுடன், அடுத்ததாக மாவட்டத்தின் காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X