2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

தாய்பாலூட்டல் முகாமைத்துவ மையம் திறப்பு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


தேசிய தாய்ப்பால் ஊட்டல் வாரத்தை முன்னிட்டு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலைக் கிராமத்தில் தாய்பால் ஊட்டலுக்கான முகாமைத்துவ மையம் திறந்துவைக்கப்பட்டது.

செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னதாக தாய்ப்பாலூட்டலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஊர்வலம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பலாச்சோலை கிராமத்துக்கு பொறுப்பான குடும்பநல உத்தியோகஸ்தர் ஜெயரஞ்சனி வரதராசன் தயாநிதி பத்மநாதன்;, யோகம்மா சம்புநாதன், கே.கோமதி, கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ்.பாக்கியராசா, வேர்ள்ட்;விஷன் நிறுவன அலுவலர் எஸ்.அமலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X