2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

வந்தாறுமூலை பிரதேசத்தில் உப விவசாய காரியாலயம் திறந்து வைப்பு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹூஸைன்


மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலை பிரதேசத்தில் சுமார் 50 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட உப விவசாய காரியாலயம் இன்று (09) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

இக் கட்டடத்தை, கிழக்கு மாகாண விவசாய கால் நடை அபிவிருத்தி சுற்றுலாத்துறை அமைச்சர நஸீர் அஹமட் திறந்து வைத்தார்.

கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற இக் கட்டடத்திறப்பு விழாவில், கிழக்கு மாகாணப் பணிப்பாளர் எஸ்.எம். ஹூஸைன். அமைச்சின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ரி.கே.தவராஜா. பிரத்தியேக செயலாளர் எஸ்.எஸ்.எம்.சறூஐ; உட்பட பலர் கொண்டனர்.

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் விவசாய நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் பொருட்டு இக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, விவசாயிகளின் நன்மை கருதி நல்வின மாங்கன்றுகளும் வழங்கி வைக்கப்ட்டதுடன் கால்நடைகளை வளர்ப்பவர்களின் வாழ்வாதார நன்மை கருதி புல் வளர்ப்புக்;காக  நீர் இறைக்கும் இயந்திரங்கள் மற்றும் முட்கம்பிகளும் வழங்கி வைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X