2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

வீதி விபத்தில் மாணவன் காயம்

Super User   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.எம்.அனாம்


வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மீறாவோடை பாடசாலை வீதியில் சனிக்கிழமை (09) இடம் பெற்ற விபத்து சம்பவத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மீறாவோடை அல் ஹிதாயா வித்தியாலயத்தில் தரம் 04இல் கல்வி கற்கும் றபீக் அன்ஸில் (வயது 09) என்ற மாணவனே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் துவிச்சக்கர வண்டியில் பாடசாலை வீதியால் தனது வீட்டுக்குச் செல்லும் போது அவ் வீதியால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுன்டு விபத்துக்குள்ளாகி மயக்கமுற்ற நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பாக மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்துத் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்ட வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X