2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

இலத்திரனியல் நூலகத்தின் நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு நகரில் நிர்மாணிக்கப்பட்டு வந்த இலத்திரனியல் நூலகத்தின் நிர்மாணப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதை முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவனேசதுறை சந்திரகாந்தன் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

சந்திரகாந்தன் முதமைச்சராக இருந்த காலப்பகுதியில் 60 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்படி நூலகத்துக்கான நிர்மானப்பணிகள் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்டன.

தற்போதுள்ள மாகாணசபை ஆட்சி மாற்றத்தின் காரணமாக இது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இக்கட்டட நிர்மாணப் பணிகளைப் பூர்த்தி செய்வதற்கு மேலும் 190 மில்லியன் ரூபாய் நிதி தேவையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X