2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

வழிகாட்டல் செயலமர்வு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


பாடசாலை கல்வியின் பின்னர் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல்கள் பற்றி விளக்கமளிக்கும் வருடாந்த கூட்டம் மட்டக்களப்பு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை (11) இடம்பெற்றது.

உற்பத்தித் திறன் ஊக்கவிப்பு அமைச்சின் கீழ் இயங்கும் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் கிழக்கு மாகாண மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த செயல்களின் அறிக்கையும் இதன்போது  ஆராயப்பட்டது.

க.பொ.த சாதார மற்றும் உயர்தர மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் ஏனையவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ். ரங்கநாதன், மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாலிக எதிரிசிங்க, உதவிப் பணிப்பாளர்களான லலித் குணரட்ண, தொழில் வழிகாட்டல் பணிப்பாளர் ரி.பி.முடித பத்மஜே உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X