2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை அதிகளவில் வரவழைக்கும் செயலமர்வு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


இலங்கையின் சுற்றுலாத் துறையின் அபிவிருத்தி சம்பந்தமாக இலங்கைக்கு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை அதிகளவில் வரவழைக்கும் நோக்குடன் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சின் சப்ரகமுவ பல்கலைக்கழகமும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பாசிக்குடா மாலுமாலு ஹோட்டலில் செயலமர்வு ஒன்று சனிக்கிழமை (09) நடைபெற்றது.

இம்மாநாட்டிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி, கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட்; கலந்து கொண்டனர்.

மேலும் சவூதி அரேபிய நாட்டின் முதலீட்டாளரான அப்துல் காதர் அல் அமோதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் மசூர் மௌலானா, முன்னாள் கிழக்குமாகாண விவசாய அமைச்சர் டாக்டர் எஸ். நவரட்ணராஜா, சப்ரகமுவ பல்கலைக் கழகபேராசிரியர் சந்தன உடலந்த, கிழக்கு மாகாகண விவசாய அமைச்சின் செயலாளர் க.பத்மநாதன், அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் டாக்டர் ஆர்.ஞானசேகரம், மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்கள், பல்கலைக் கழகமாணவர்கள் , தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, போன்ற நாடுகளிலிருந்தும் வருகை தந்திருந்த சுற்றுலாத்துறை சார்ந்;தோருர் பங்கேற்றிருந்தனர்.

கிழக்கு மாகாணத்தில் அதிகளவில் வருமானத்தை ஈட்டித் தரக் கூடிய துறையாக தற்போது சுற்றுலாத்துறை காணப்படுவதால் உள்நாட்டு வெளிநாட்டவர்களின் வருகையினை அதிகளவு கவரக் கூடிய வகையில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையிலான ஒன்று கூடல் செயலமர்வாக இது அமைந்திருந்ததாக கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி, கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடிமற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X