2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

யானை தாக்குதலால் வீடுகள் சேதம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச  செயலகப்பிரிவின் பலாச்சோலை கிராமத்தில் இன்று திங்கட்கிழமை (11) அதிகாலை யானையின் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்ததுடன்  பயன்தரு மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

அறுவடை செய்து வீட்டிற்குள் வைத்த நெல்லை யானைகள்  உட்கொண்டுள்ளதுடன் உடமைகள் சேதமாக்கப்பட்டதுடன் மயிரிழையிலேயே குடும்பத்தினர் உயிர்தப்பியும் உள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  பொன். செல்வராஜா சம்பவ இடத்திற்கு சென்று  நிலைமைகளை  கேட்டறிந்த பின் மீண்டும் விவேகானந்தபுரம் சென்று வன ஜீவராசிகள்  திணைக்களம் கிளை அலுவலக உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடினார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X