2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மீனவர்களின் வாழ்வதாரத்துக்கு உதவுவேன்: ஹாபீஸ் நசிர் அஹமட்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 12 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பிரதேசத்தின் றிஸ்வி நகர் கிராமத்திலுள்ள மீனவர்களின் வாழ்வதார மேம்பாட்டுக்காக  எதிர்காலத்தில் உதவி செய்வதாக  கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நசிர் அஹமட் தெரிவித்தார்.

இந்தக் கிராமத்துக்கு  நேற்று திங்கட்கிழமை  (11) மாலை விஜயம் செய்த  ஹாபீஸ் நசிர் அஹமட் அங்குள்ள மீனவர்கள் மற்றும் சமூக சேவை அமைப்புக்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், றிஸ்வி நகர் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களை சந்தித்தார்.

இதன்போது மீனவர்கள் மற்றும் பொதுமக்களின்  பிரச்சினைகள் தொடர்பில் ஹாபீஸ் நசீர் அஹமட் கேட்டறிந்தார்.

இந்தக் கிராமத்திலுள்ள மீனவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு எதிர்காலத்தில்  முடியுமான உதவிகளைச்  செய்தாகவும் அவர் கூறினார்.
மேலும், பல்வேறு அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் தன்னிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை  எதிர்காலத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.

றிஸ்வி நகர் பள்ளிவாசல் குர்ஆன் மதரசா மண்டபத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் மண்முனைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.ஏ.மதீன் உள்ளிட்ட பலர்; கலந்து கொண்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X