2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

நாட்டை விட்டு வெளியே சென்றவர்கள் அல்லல்படுகின்றனர்: பொன். செல்வராசா

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 12 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்

பயங்கரவாதம் காரணமாக நாட்டை விட்டு வெளியே சென்றவர்கள் குறிப்பாக இளைஞர்கள் இன்னும் இன்னும் அல்லல்பட்டுக்கொண்டே இருக்கின்றார்கள். இவை ஏன் என்று கூறுகின்றபோது எமக்கு இன்னும் உண்மையான சமாதானம் கிடைக்கவில்லை. இதை அனைவரும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

மட்டக்களப்பு குருமண்வெளி இளவரசி சீர்பாத தேவி பாலர் பாடசாலையில் நீண்டகாலமாக நிலவிய குடிநீர் பிரச்சினையை தீர்த்துவைத்தமைக்கு நன்றி  தெரிவிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'முன்பள்ளித்திட்டம் இன்று சகல பிரதேசங்களிலும் முன்னேற்றகரமாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. இது தற்போது கிழக்கு மாகாணசபையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றது. இதற்கென ஒரு சபையும் நியமிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு சபைகள் நியமிக்கப்பட்டிருந்தாலும், இப்பாடசாலைகளில் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு என்று ஒரு கொடுப்பனவு இன்னும் வழங்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயம். வழங்கப்படும் என்று சொல்லிக்கொண்டிருந்தாலும் இதுவரையில் எவ்வித கொடுப்பனவுகளும் இந்த கிழக்கு மாகாணபையால் வழங்கப்படவில்லை.

முன்பள்ளி என்று சொல்கின்றபோது இங்கு மட்டுமல்ல சர்வதேசத்திலும் ஒரு முக்கியமாhகவே இருக்கின்றது. இதனை அந்த நாட்களில் அரிவரி என்று சொல்லுவார்கள். அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இந்த முன்பள்ளிகள் முதலாம் தரத்தை இலகுபடுத்துவனவாக இருக்கின்றது. இ;ந்த விடயத்தில் சில தொண்டர் ஸ்தாபனங்கள் இந்த முன்பள்ளிகளை நடத்திக்கொண்டு வருகின்றார்கள். இவ்வாறான முன்பள்ளிகள் எமது கிராமங்களுக்கு அத்தியாவசியமாக இருக்கின்றது. இதன் மூலம் தான் எமது சிறுவர்களை சிறுவயதிலிருந்து ஒழுக்கசீலர்களாக வளர்த்தெடுக்க முடியும்.

இக்காலகட்டத்தில் குடிநீர்ப் பிரச்சினை மிகவும் முக்கியமான பிரச்சினையாக இருக்கின்றது. மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்தில் குடிப்பதற்கு தண்ணீர் என்பது கிடைக்காத ஒரு நிலையில் எமது மக்களின் வாழ்வு இருக்கின்றது. இதற்கு காரணம் பருவமழை சரியாகப் பெய்யவில்லை. இதற்கு இயற்கையிலும் காரணங்கள் இருக்கி;ன்றன. செயற்கையான காரணங்களும் இருக்கின்றன. இயற்கையில் ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டுள்ளமையால் பருமழையில் மாற்றங்கள் ஏற்படுகின்றது. செயற்கையான விளைவாக காடுகள் அழிக்கப்படுகின்றன.
ஒரு மாவட்டத்தில் குறைந்தது 20 சதவீதமாவது காடுகள் இருக்க வேண்டும். ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தமட்டில் 8 சதவீதம் மாத்திரமே இருக்கின்றது. இதனால், பருவமழை பொய்க்கின்றது. அபிவிருத்தி என்ற போர்வையில் சில காடுகள் அழிக்கப்படுகின்றன அத்துமீறிய குடியேற்றம், பயிர்ச்செய்கை போன்றவற்றால் சில காடுகள் அழிக்கப்படுகின்றன. எமது மாவட்டத்தின் கிரான், செங்கலடி கெவிலியாமடு போன்ற பிரதேசங்களில் அயல் மாவட்டமான அம்பாறையிலிருந்து வந்த பெரும்பான்;மை இனத்தவர்கள் இவ்வாறான செற்பாடுகளை மேற்கொண்டு எமது மாவட்டத்துக்கு  சொந்தமான காடுகளை அழித்து வருகின்றார்கள்.

இதனால் 20 சதவீதமாக இருக்க வேணடிய அம்பாறை மாவட்டத்தில் அதற்கதிகமாக 30 சதவீதமாகவும் எமது மாவட்டத்தில் காடுகளின் சதவீதம் குறைவாகவும் காணப்படுகின்றன. இதனை நாங்கள் 20 சதவீதமாக மாற்ற வேண்டும். சென்ற முறை எமது மேய்ச்சல் தரைகளில் எமது கால்நடைகளை வளர்க்கமுடியாத நிலை இருந்தது. இதனால் கால்நடைகளை மேய்ப்பதற்கு இடம் இல்லாமல் போன விடயம் யாவரும் அறிந்ததே. இவற்றுக்கெல்லாம் பின்புலத்திலே அரசாங்கம் இருக்கின்றது. இவற்றைலெ;லாம் பார்க்கும்போது தற்போது ஏற்பட்ட குடிநீர் பிரச்சினைக்கும் இவையெல்லாம் ஒரு முக்கிய காரணியாக இருக்கின்றது.

கடந்த 30 வருட புரையோடிப் போன போராட்ட காலம் இருந்தபோது எமது படுவான்கரையில் எல்லைப்புறங்களில் வாழ்ந்த எமது மக்களையும் அவர்களது உடைமைகளையும் கால்நடைகளையும் பாதுகாப்பதில் எமக்கு பெரும் பங்கு இருக்கின்றது.  யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து வந்தவர்கள் எத்தனை பேர் மீண்டும் அவ்விடங்களில் குடியேறி இருக்கின்றார்கள் என்று பார்க்கப் போனால் விரல்விட்டு எண்ணக்கூடிய நிலையிலேயே இருக்கின்றது. இவ்வாறு இருப்பதும் மாற்றான் வந்து குடியேறுவதற்கு ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. எம்மவர்கள் வசதியுள்ள இடத்தைத் தேடி ஓடுகின்றனர் ஆனால், மாற்று இனத்தவர் எங்கு வேண்டுமானாலும் வாழப்  பழகியுள்ளார்கள். இதுவே இன்றைய அத்துமீறிய குடியேற்றங்கள் இடம்பெறுவதற்கு காரணியாக இருக்கி;ன்றது. இதனால் பெரிதும் பாதிக்கப்படப் போவது எமது மட்டக்களப்பு மக்கள் தான்.

இன்று காசு கொடுத்தாலும் படுவான்கரையில் குடிநீர் பெறமுடியாத நிலையில் இருக்கின்றது. இவ்வாறு ஒரு நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது என்று சொன்னால் அது காடு அழிப்பினால் ஏற்பட்ட பிரதிபலன் என்பது யாவரும் அறிந்ததே.

எது எப்படி இருந்தாலும் தற்போது குடிநீர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சிற்சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வளர்ந்து வருகின்ற சமுதாயத்துக்கு  ஏற்ப போதியளவு நீர் விநியோகம் வழங்கப்படாமையால் மேற்படி தட்டுப்பாடுகள் ஏற்படுகின்றன.

முப்பது வருட கால போரட்டத்தையும் விடவும் இன்று நாம் வாழ்வதற்காக மிகவும் போராடிக் கொண்டிருக்கின்றோம் என்றே கூறவேண்டும். ஏனெனில் ஒரு புறம் தண்ணீர், உணவுப் பிரச்சினை, வேளாண்மை சரியாக விளையவில்லை உணவைச் சரியாகப் பெற முடியவில்லை, யானைகளினால் பிரச்சினை இவ்வாறு பற்பல பிரச்சினைகள். அதிலும் யானைப் பிரச்சினை பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. இதற்கு தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு தாமதங்கள் ஏற்படுவதால் மிகவும் தவிப்புக்கு  உள்ளாக்கப்படுகின்றோம். இவ்வாறு வாழ்வதற்கே நாம் தற்போது போராடிக்கொண்டிருக்கின்றோம்.

இந்த அளவில் நாம் பார்க்கின்றபோது போராட்ட காலத்தில் இருந்ததை விட, போராட்டம் முடிவுற்று தற்போது வாழ்வதற்கு பெருமளவில் போராடிக்கொண்டிருக்கின்றோம். இது மட்டுமல்லாது எமக்கு பூரண சமாதானம் இல்லாத காரணத்தினால் தற்போதும் நாங்கள் போராடிக்கொண்டிருப்பவாகளாகவே இருக்கின்றோம்.

இன்று இந்நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதம் காரணமாக நாட்டை விட்டு வெளியே சென்றவர்கள் குறிப்பாக இளைஞர்கள் இன்னும்இன்னும் அல்லல்பட்டுக்கொண்டே இருக்கின்றார்கள். இவை ஏன் என்று கூறுகின்றபோது எமக்கு இன்னும் உண்மையான சமாதானம் கிடைக்கவில்லை. இதை அனைவரும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். எமது நாட்டில் உண்மையான சமாதானம் இருந்திருப்பின், எமது மக்கள் படகுகளில் வெளிநாடு சென்றிருக்கவேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அல்லலுற்று சென்று இடையில் மரணித்திருக்கத் தேவையில்லை. புலம்பெயர்ந்து வேறு நாடுகளில் வாழத் தேவை இல்லை. இவ்வாறு எமது மக்களின் அபிலாஷைகளை கொடுப்பதற்கு மறுக்கப்படுவதே இவற்றுக்கெல்லாம் மறுமொழியாக இருக்கின்றது.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் கூறும்போது சம்பந்தன் ஐயாவின்  கோரிக்கைகளில் 80 சதவீதமானவற்றை நாம் ஏற்றுக்கொண்டு அவற்றை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்தில் இருக்கும் கூட்டுக்கட்சிகள் ஒத்துழைக்கத் தயாராக இல்லை. இதனால் அந்த அரசாங்கத்தின்; முன்னோடிக் கட்சி வாய் மூடி மௌனியாக இருக்க வேண்டிய சூழலில் இருக்கின்றது.

இது போலவே ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரும்; கூறினார் நாம் எண்ணியிருந்தோம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொல்லாத கட்சி. அவர்கள் பிரிவினையை வேண்டுகின்றார்கள். இந்த நாட்டுக்கு துரோகம் இழைக்கப் போகின்றார்கள் என்று. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசாங்கப் பரவலாக்கத்தை தான் கேட்கிறார்கள். அவ்வாறு இருக்கும்போது இந்த அரசாங்கம் அவர்களுடன் பேசுவதில் என்ன தவறு இருக்கின்றது என்றெல்லாம் கூறியிருக்கின்றார்கள். இதனைக் கேட்கும்போது எமக்கு மகிழ்ச்சியை அளிக்கி;றது. இவற்றையெல்லாம் பார்க்கின்றபோது இந்த நாட்டின் முக்கிய கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கு தயாராக இருக்கும்போது ஏனைய உதிரிக் கட்சிகளின் நிலைப்பாட்டைக் கொண்டு இந்த அரசாங்கம் இன்னும் எங்களுடன் பேச முன்வராமல் இருப்பது ஏன் என்று நாம் கேட்கின்றோம்.

இதில் உண்மை என்னவென்றால் இவர்கள் எம்மை நேரடியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல், தெரிவுக்குழுவுக்கு அழைக்கின்றார்கள். அந்தக் கூட்டத்துக்;கு நாம் சென்றால் ஐக்கி தேசியக் கட்சி பரவாயில்லை. அமைச்சர் அவர்கள் கூறியதுக்கிணங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பரவாயில்லை. ஏனைய பெரும்பாண்மை உதிரிக்கட்சிகள் இருக்கும் அவையில் எமது கோரிக்கைகள் எவ்வாறு செல்லுபடியாகும் என்பதை எமது மக்களே புரிந்து கொள்ள வேண்டும். இதன் காரணமாகத்தான் இன்றுவரை நாம் பேச்சுவார்த்தைக்கு போகாமல் இருக்கின்றோம். அதற்கு கூட நாம் மறுக்கவில்லை எம்முடன் சில நிபந்தனைகள் அடிப்படையில் பேச்சுவார்த்தை மேற்கொள்வதானால் நாம் தயார் என்று கூறினோம்.  ஆனால், அதற்கும் அவர்கள் தயாராக இல்லை. ஏனெனில் உதிரிக்கட்சிகள் அல்லது கூட்டுக்கட்சிகள் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்குகின்றார்கள் இல்லை.

ஊவா மாகாணசபைத் தேர்தலில் விமல் வீரவன்ச தனித்து போட்டியிடுவதாக கோரியிருந்தார். அதற்கு அரசாங்கம் அவரின் காலில் விழுந்து அதனைத் தடுத்து  தற்போது பதுளை மாவட்டத்தில் சேர்ந்தும் மொனராகலை மாவட்டத்தில் தனித்தும் போட்டியிடுவது என்ற முடிவுக்கு வந்திருக்கின்றார்கள். இவ்வாறு இருக்கின்றது இன்று இந்த அரசாங்கத்தின் நிலை. இவ்வாறு கூட்டுக்கட்சிகளின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் இந்த அரசாங்கத்துடன் நாம் எவ்வாறு சிறந்த எதிர்பார்ப்பை வைக்க முடியும். இவ்வாறான காரணங்களால் தான் நாம் பேச்சுவார்த்தைக்கு செல்லாமல் இருக்கின்றோம். நாம் செய்கின்றவை சரியா, பிழையா என்பதை எமது மக்களே உணர்ந்து கொள்வார்கள்.

நிரந்தரத் தீர்வு எட்டும் வரை நாங்கள் குரல் கொடுக்கத் தயங்க மாட்டோம். தவறமாட்டோம். அதற்கிடையில் அரசாங்கக் கட்சியை ஆதரிக்கும் சில தமிழர்கள் அபிவிருத்தி மட்டும் போதும் அபிவிருத்தி தான் எங்கள் கடவுள் என்று கூறிக்கொண்டு திரிகின்றார்கள். அவர்களுக்கு நாங்கள் பதில் சொன்னால் போதாது. எமது மக்களாகிய நீங்கள் தான் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும். நீங்கள் அவர்களுக்கு பதில் சொன்னால் தான் அவர்களுக்கு புரியும் என நினைக்கின்றேன்.

நாங்கள் அபிவிருத்தியை வேண்டாம் என்று சொல்லவில்லை. இறைமை உள்ள அரசாங்கம் மக்களுக்கு தேவை ஏற்படுகின்றபோது அவர்களுக்கு அபிவிருத்தியை செய்து கொடுக்க வேண்டும்;. இல்லை என்றால் இந்த அரசாங்கமே தேவையில்லை. மக்களின் பாதுகாப்பு, கல்வி, அபிவிருத்தி என்பது ஒவ்வொரு அரசாங்கத்தின் கடமை. இதனைச் செய்துதான் ஆகவேண்டும். இதனை யார் வேண்டுமானாலும் செய்ய முடியும். இதனை விடுத்து இதனை நாம் மட்டும் தான் செய்தோம்.  எம்மால் மட்டுமே செய்ய முடியும். எமக்கு அபிவிருத்திதான் வேண்டும். அபிலாஷைகள் தேவையில்லை. இனப்பிரச்சினைக்குரிய தீர்வு தேவையில்லை என்று எம்மவர்கள் சிலர் கூறிக்கொண்டு திரிந்தால் எப்போது இந்த இனப்பிரச்சினை தீர்வது.

முப்பது வருட காலங்கள் நாம் கஷ்டப்பட்டோம். இன்று கூட பல போராட்டங்களை நாம் வாழ்வதற்காக மேற்கொண்டு வருகின்றோம். இந்த போராட்டங்கள் எல்லாம் தீர்ந்து ஒரு உண்மையான சமாதானத்தை இந்த நாட்டில் கணும் வரை எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து எமது தமிழ் மக்களுக்காக போராடிக் கொண்டே இருக்கும். இதனை நாம் நிறுத்த முடியாது. இது எப்போது தீரும் என்பதை நாம் சொல்ல முடியாது ஆனால், அவற்றை எவ்வாறு விரைவில் தீர்;க்க முடியுமோ அவ்வழிகளில் நாம் போராடிக்கொண்டிருக்கின்றோம். அதற்காக நாம் பல பிரச்சினைகளை தாண்ட வேண்டியவர்களாக இருக்கின்றோம். வெளிநாட்டில் தற்போது சர்வதேச விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. உள்நாட்டில் அதனை மேற்கொள்வதற்கு இந்த அரசாங்கம் இடம் கொடுக்கவில்லை. இதற்கிடையில் உள்நாட்டில் விசாரணை மேற்கொள்வதற்கு காணாமல் போனோர் சம்மந்தமான குழுவொன்றை இந்த அரசாங்கம் நிறுவியிருக்கின்றது. இவையெல்லாம் சமாளிக்கின்ற வேலைகள் உண்மையான சர்வதேச விசாரணை வெளிநாட்டில் ஆரம்பித்து விட்டது. இங்கும் அது நடக்கும்.

எனவே நாம் சாந்தியும் சாதானமுமாக இந்த நாட்டில் வாழ வேண்டுமாக இருந்தால் உதட்டளவில் இருக்கின்ற சமாதானம் எமக்கு தேவையில்லை. உள்ளத்தளவில் எப்போது இந்த நாட்டில் சமாதானம் ஏற்படுகின்றதோ, அப்போதுதான் எமது தமிழ்ச் சமூகம் இ;ந்த நாட்டில் சந்தோசம் மிகு சமூகமாக வாழ முடியும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X