2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

துர்கிஷ்தானிலுள்ள தங்களது பிள்ளைகளை மீட்குமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல் 

 துர்கிஷ்தான் நாட்டில் கடமை புரியும் தங்களது  பிள்ளைகளை மீட்டுத் தருமாறு அதிகாரிகள் மற்றும்  அரசியல்வாதிகளிடம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இவர்களின்  உறவினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

துர்கிஷ்தானுக்கு  தொழிலுக்காகச் சென்றவர்களின் உறவினர்கள் தெரிவிக்கையில்,

'பழுகாமத்தைச்  சேர்ந்த 24 பேரும் காந்திபுரத்தைச்; சேர்ந்த 5 பேரும் களுமந்தன்வெளியைச்; சேர்ந்த 3 பேரும்  மண்டூ - 39ஆம் கிராமத்தைச் சேர்ந்த 3 பேரும் என தங்களுக்கு தெரிந்த அளவில் துருகிஷ்தானில் உள்ளனர்.  இதை விட வெல்லாவெளி, தாந்தமலை போன்ற பல கிராமங்களைச் சேர்ந்தவர்களும் அங்கு உள்ளனர். அவற்றுள் 39 பேர் துன்புறுத்தப்பட்டு காயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் அங்கு உள்ளனர்.

கடந்த 2012ஆம் 2013ஆம் ஆண்டுகளில் தொழில்வாய்ப்புக்காகச் சென்ற எமது உறவினர்கள், துர்கிஷ்தானில் நிகழும் அசாராண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் எங்களுக்கு இருக்கின்றது.

அந்நாட்டு ஆயுதப் படைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்குள்ளவர்கள் அறிவித்துள்ளார்கள்.  எனவே எங்களது உறவுகளை எதுவித பாதிப்புமின்றி விரைவில் மீட்டுத்தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்' என்றனர். 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X