2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

சிவில் பாதுகாப்புக் குழுக்களை பலப்படுத்தும் ஆலோசனைக் கூட்டம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


சிவில் பாதுகாப்புக் குழுக்களை பலப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டமொன்று காத்தான்குடி செயலகத்தில் இன்று செவ்வாய்கிழமை (12) நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான பேராசிரியர் ரஜீவ் விஜேசிங்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில், மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஏ.எசி.அகமட் அப்கர், பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஏ.கருணாகரன், மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்க காத்தான்குடி காதி நீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் எம்.ஐ.சுபைர் உட்பட கிராம உத்தியோகத்தர்கள், மற்றும் முக்கியஸ்தர்கள், அதிகாரிகள் பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது சிவில் பாதுகாப்புக் குழுக்களை பலப்படுத்துவது மற்றும் அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மற்றும் பாடசாலைகளின் தேவைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X