2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

கொக்கட்டிசோலை சம்பவம்; பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டார் பொன் செல்வராசா

Super User   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


- தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனையறுப்பான்,  பன்சேனை பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (12) பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, மாகாண சபை உறுப்பினர் இந்திர குமார் பிரசன்னா ஆகியோர் இன்று புதன்கிழமை (13) வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டனர்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனையறுப்பான் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (12) பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற முறுகல்நிலையை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே இவர்கள் காயமடைந்திருந்தனர்.

இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சென்று பார்வையிட்டதன் பின்னர் பனையறுப்பான் பிரதேசத்துக்கு சென்று சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்துகொண்டார்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X