2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஹெரோயின் வர்த்தகர் கைது

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஹெரோயின் கடத்தலில் ஈடுபடுவதாகக் கூறப்படும்  வர்த்தகர் ஒருவர் ஏறாவூரில் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்ரம தெரிவித்தார்.

ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள்  வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்தச் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தச் சந்தேக நபர் கைதுசெய்யப்படும்போது அவர் வசம் 02 சிறிய  ஹெரோயின் பொதிகள் இருந்துள்ளன.  இந்தப் பொதிகளில் ஒன்று அவரது சேர்ட் கை மடிப்புக்குள்ளும் மற்றையது அவர் பயணம் செய்த வான் ஒன்றிலும் மறைத்துவைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X