2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  பிரதேசங்களில் சமீப காலங்களாக அதிகரித்துள்ள போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையை முற்றாகத் தடுக்கும் முகமாக சகல தரப்பையும்; ஒன்றிணைத்து  கலந்தாலோசனை பெறப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகர பிதா அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

ஏறாவூர் நகரசபையின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற இந்தக் கலந்தாலோசனையில்  ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்ரம, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம்.ஷயீட், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் எம்.எச்.எம்.தாரிக், ஏறாவூர் கோட்டக் கல்வி அதிகாரி ஐ.எல்.மஹ்ரூப், பள்ளிவாசல்கள் மற்றும் கோவில்களின் பிரதிநிதிகள், நகரசபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர்  கலந்துகொண்டனர்.

இங்கு  அதிகரித்துவரும் போதைப்பொருள் விநியோகம் மற்றும் பாவனையை முற்றாக ஒழிப்பதற்கு பல்துறைசார்ந்த செயற்பாட்டாளர்களைக் கொண்ட  குழு ஒன்று இதன்போது நியமிக்கப்பட்டதாகவும்   ஏறாவூர் நகரபிதா அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
எதிர்வரும் 24ஆம் திகதி ஏறாவூர் நகரில் போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமாக மாபெரும் விழிப்புணர்வுப் பேரணியை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இங்கு போதைப்பொருளை முற்றாக ஒழிப்பதில் தாம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக கலந்தாலோசனைக் கூட்டத்தில் பேசிய ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்ரம தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X