2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உணவுகளை சுகாதாரமாக கையாளும் முறை பற்றி விளக்கம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


உணவுகளை சுகாதாரமாக கையாளும் முறை பற்றி உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம்  மட்டக்களப்பு மாநகரசபை கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

இரண்டாவது சுகாதார அபிவிருத்தித் திட்டம்; - 2014 என்ற திட்டத்தின் கீழ், உலக வங்கியின் உதவியுடன் உள்ளுராட்சித் திணைக்களங்கள் ஊடாக விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்படுவதாக மாநகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜே.தேவநேசன் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் அடுத்த கட்டமாக உணவகங்களில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்பதுடன், ஏ, பி, சி தரச் சான்;றிதழ்கள் வழங்கப்படும்  எனவும் அவர் கூறினார்.

இந்த விழிப்புணர்வுக் கூட்டத்தில் மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், உதவி ஆணையாளர் என்.தனஞ்செயன், சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், சமூக சுகாதார உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.

இந்தக் கூட்டத்தில் கல்லடி மற்றும் புளியந்தீவு பகுதிகளில் உள்ள உணவகங்களை நடத்தும் 50 பேர் கலந்துகொண்டனர். 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X