2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பெயர்ப் பதாதைகள் கையளிப்பு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 13 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு பிரதேச செயலக அதிகாரிகளின் பெயர்களும் அவர்களது பதவிகளும் பொறிக்கப்பட்ட பெயர்ப் பதாதைகளை தாம் அச்சுப் பொறித்து இலவசமாக அன்பளிப்பு செய்துள்ளதாக மட்டக்களப்பு மகளிர் மகா சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வு இன்று புதன்கிழமை (13) மட்டக்களப்பு  ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் 100 அலுவலர்களுக்கு அவர்களது பெயர்களும் பதவிகளும் பொறிக்கப்பட்ட மும்மொழிகளைக் கொண்ட பெயர்ப் பதாதைகளை மட்டக்களப்பு மகளிர் மகா சங்கம் கையளித்திருப்பதாக ஆரையம்பதி பிரதேச செயலாளர் எஸ். வாசுதேவன் தெரிவித்தார்.

ஆரையம்பதி பிரதேச செயலாளர் எஸ். வாசுதேவன் தலைமையில் அதிகாரிகளுக்கு பெயர்ப் பதாதைகள் கையளிக்கும் இந்நிகழ்வில் ஆரையம்பதி பிரதேச மகளிர் சங்கத் தலைவி விஜயகுமார் யசோதா, செயலாளர் வடிவேல் கண்ணகி, மட்டக்களப்பு மகளிர் மகா சங்க இணைப்பாளர் கந்தையா ராஜலெட்சுமி ஆகியோர் பெயர்ப் பதாதைகளைக் கையளித்தனர்.

அரசாங்கக் காரியாலயங்களில் பொது மக்கள் அதிகாரிகளையும் அவர்களது பதவிகளையும் அடையாளம் கண்டு, தமக்கு வேண்டிய சேவைகளை இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்காக அதிகாரிகளுக்கு அவர்களது பெயர் மற்றும் பதவி பொறிக்கப்பட்ட பெயர்ப் பதாதைகளை தாம் வழங்கியிருப்பதாக, மட்டக்களப்பு மகளிர் மகா சங்க இணைப்பாளர் கந்தையா ராஜலெட்சுமி தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X