2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கொக்கட்டிச்சோலை சம்பவம் தொடர்பில் அமெ. தூதரக அதிகாரிகள் வினவினர்:யோகேஸ்வரன்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 14 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அனாம்,தேவ அச்சுதன்

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பனையறுப்பான் கிராமத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோதல் தொடர்பில்  அமெரிக்கத் தூதரக அதிகாரியினர் தன்னிடம் நேற்று புதன்கிழமை வினவியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மேலும், பாதிப்புக்குள்ளான கிராம மக்களிடம் தகவல்களை பெற்று பூரண விளக்கம் ஒன்றை அமெரிக்க தூதரகத் அதிகாரிகளுக்கு  வழங்கியுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.
 
இது இவ்வாறிருக்க, நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெண்களை பார்வையிட்டதுடன்,  சம்பவம் தொடர்பில் கேட்டறிந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X