2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

பாசிக்குடாவில் சுற்றுலா கற்கைநெறி பாடசாலை

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சுற்றுலாப் பிரயாண அபிவிருத்தி அதிகாரசபையின் ஏற்பாட்டில்,  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ  கற்கைநெறி  பாடசாலை பாசிக்குடாவில்   விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளனது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலா அபிவிருத்தியில் மேற்கொள்ளக்கூடிய செயற்றிட்டங்கள், சுற்றுலாப் பாடசாலையை  ஆரம்பிப்பதால் ஏற்படவுள்ள மாற்றங்கள், எதிர்காலத்திட்டங்கள் தொடர்பில்  ஆராயப்பட்டன.

சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ  பாடசாலையில் ஆரம்பத்தில் அடிப்படைக் கற்கைநெறி ஆரம்பிக்கப்படவுள்துடன், இதையடுத்து சான்றிதழ் மற்றும் டிப்ளோமா கற்கைநெறிகள்; ஆரம்பிக்கப்படவுள்ளன.

இப்பாடசாலை ஆரம்பிக்கப்படுவதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை விருத்தியடையும் என்பதுடன், மாவட்டத்திலுள்ள பெருந்தொகை இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகள் கிடைக்கும்.

அதேநேரம் மாவட்டத்தின் பாரம்பரிய கைத்தொழில், பாரம்பரிய உற்பத்தியாளர்களும் பயன்பெறுவார்கள் என மாவட்டச் செயலாளர்  தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் சுற்றுலாக் கற்கைகள் பாடசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் பிரபாத் குலதுங்க, சிரேஷ்;ட விரிவுரையாளர் சுஜித் ஜாமசிங்க, பாசிக்குடா தேசிய சுற்றுலா மைய அதிகாரி முஹமட் மாகீர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதம கணக்காள் எஸ்.நேசராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X