2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவாக சூழலை வைத்திருந்த ஐந்து பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

George   / 2014 ஓகஸ்ட் 14 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கூழாவடி மற்றும் மாமாங்கம் பகுதியில் டெங்குவை கட்டுப்படுத்தும் வகையில் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதும் நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவாக சூழலை வைத்திருந்த ஐந்து பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் நேற்று புதன்கிழமை (14) ப.முருகதாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
                           
மாதாந்தம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு அமைவாகவே இந்த விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நுளம்பு பெருக்கத்தினை கட்டுப்படுத்தி டெங்கு நோயின் தாக்கத்தினை தடுக்கும் வகையில் தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் சுகாதார பிரிவு மற்றும் கிராம சேவையாளர்கள் இணைந்து இந்த சோதனையினை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது இப்பகுதியில் 105 வீடுகள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. இவற்றில் ஐந்து வீடுகள் நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவாக சூழலை வைத்திருந்த காரணத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை திஸவீரசிங்கம் சதுக்கம் பிரதேசத்தில் ஒரு டெங்கு நோயாளி இனங்காணப்பட்டுள்ளதாகவும் குறித்த பகுதியிலும் நுளம்பு பெருக்கத்தை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் முருகதாஸ் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X