2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், க.ருத்திரன்

புதிய காத்தான்குடி நூறானியா மாவத்தையில் உள்ள வீதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 3 பிள்ளைகளின் தாயான எம்.எல்.ஹைறுன்னிசா (வயது 45) என்பவர் இன்று வெள்ளிக்கிழமை மரணமடைந்துள்ளார்.

தனது கணவர் மற்றும் பிள்ளையுடன் கடந்த திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில்  சென்றுகொண்டிருந்த இவர்,   மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானார்.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை,  வழைச்சேனை  பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை (14) மாலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த கறுவாக்கேணி வாழைச்சேனையைச் சேர்ந்த எஸ்.கணபதி (வயது 70); என்பவர்  வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக  வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலிருந்து அநுராதபுரம் செல்வதற்;காக வந்த சுற்றுலா பஸ் வண்டி சைக்கிளில்  வீதியை  கடக்க முற்பட்டவரை மோதியுள்ளது.
குறித்த பஸ் வண்டி  பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதுடன், இதன் சாரதியையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X