2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

தமிழ்மொழி கற்ற பொலிஸாருக்கு சான்றிதழ்கள்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பில் தமிழ்மொழி டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்த 90 ஆண், பெண் பொலிஸார் இன்று வெளியேறினர். இவர்கள் தமிழ் மொழியை பூர்த்தி செய்து வெளியேறும் வைபவம் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றது.

இந்தக் கல்லூரியில் இரண்டாம் மொழி தமிழைக் கற்று வெளியேறும் எட்டாவது அணி இதுவாகும்.

இவர்களுக்கு ஆறு மாதகாலம் சிறந்த தமிழ் மற்றும் சிங்களமொழி வல்லுநர்களான உப பொலிஸ் பரிசோதகர்களான அன்புராஜ் சந்தியாகுமாரி, கிருஷ்ணகுமாரி ஜெயநந்தகுமார், பொலிஸ் சார்ஜன்ட் ரீ.சிங்கராஜா, வெளிக்கள உத்தியோக]தர் லக்ஷ்மி நிர்மலகுமாரன்   ஆகியோரால் பயிற்சியளிக்கப்பட்டதாக கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பதிகாரி கே.பேரின்பராஜா தெரிவித்தார்.

கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பதிகாரி கே.பேரின்பராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 
மட்டக்களப்பு மாவட்ட 231ஆவது இராணுவப் பிரிவின் பிரிகேடியர் மேஜர் ஜெனரல் கே.எச்.பி.பாலித்த பெர்னாண்டோ, மட்டக்களப்பு பொலிஸ் பரிசோதகர் ஏ.ஏ.வாஹித்,  தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி உபாலி ஜெயசிங்ஹ உள்ளிட்ட இன்னும் பல பொலிஸ் உயர்நிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது, கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X