2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 16 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பலஸ்தீன மக்களுக்கு வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாக, ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு நேற்று (15) கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தாக்குதலால் அல்லலுறும் மக்களுக்கு ஆதரவளிப்பதற்காக,  இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவித் தொகையாக வழங்குவதற்கு முன்வந்துள்ளதையிட்டு  நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.

நாட்டின் தலைவரான தங்களுக்கு முஸ்லிம் மக்கள் சார்பாக மனப்பூர்வமான நன்றியையும் பாராட்டுதலையும்  தெரிவித்துக்கொள்கின்றோம்;. 
தங்களின் இந்த செயற்பாட்டின் மூலம் இலங்கைக்கு  ஆதரவு வழங்கும் முஸ்லிம் நாடுகளுக்கு  ஒரு நல்ல  செய்தியையும் நட்புத் தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள். இதன் முலம் உலக முஸ்லிம் நாடுகளின் உறவு இலங்கையுடன் வலுப்பெற வாய்ப்பேற்பட்டுள்ளது.

இலங்கை - பலஸ்தீன் நட்புறவுச் சங்கத்தின் தலைவராக ஆரம்பகாலம்; தொட்டு செயற்படும் தாங்கள் அண்மையில் காஸாமீது இஸ்ரேல் மேற்கொள்ளும்  கண்மூடித்தனமான தாக்குதலுக்கு எதிராக  மனிதாபிமான  அடிப்படையில்  குரல் கொடுப்பதையிட்டு  இலங்கை  முஸ்லிம்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.

இதேவேளை, காஸாவில் அப்பாவி மக்கள் மீது மிலேச்சத்தனமான  தாக்குதல்  நடாத்தி  மனித உரிமை மீறல்களில் ஈடுபடும்  இஸ்ரேலுக்கு, அமெரிக்க அரசாங்கம்  வழங்கும் ஆதரவை  தாங்கள் கண்டிக்க வேண்டும்.

இஸ்ரேலுக்கு எதிராக  சர்வதேச விசாரணையைத் தொடுக்க உலக நாடுகளுக்கும்,  ஜக்கிய நாடுகள் சபைக்கும் அழுத்தம்கொடுக்க முன்வரவேண்டும் எனவும் வேண்டிக் கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளதாக, ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் ஏசீஎம் சயீது தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X