2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சுய தொழில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 16 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம். நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் பெண்களின் சுய தொழில் நடவடிக்கையை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால், சுய தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த சுய தொழில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு நேற்று (15) உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மேற்படி அமைப்பினால் இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதுவராலயத்தின் ஐக்கிய அமெரிக்க உதவித்திட்டத்தின் அனுசரணையுடன் சுயதொழில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இந்நிகழ்வு செங்கலடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான  திருமதி சல்மா ஹம்சாவின் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் செங்கலடி உதவி பிரதேச செயலாளர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இங்கு தோலினால் பை உற்பத்தி, சப்பாத்து உற்பத்தி  மற்றும் பணை ஓலையினால் உற்பத்திப் பொருட்கள் தயாரித்தல், தையல்  போன்ற சுய தொழில் பயிற்சிகள் இடம் பெற்று வருகின்றன.

இந்த சுயதொழில் பயிற்சியில்; 16 பெண்கள் ஈடுபட்டுள்ளனர் இவர்களுக்கான சுய தொழில் பயிற்சிக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் இது 20 நாட்களைக் கொண்ட பயிற்சியாகும் என திருமதி சல்மா ஹம்சா தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X