2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் காணாமல் போன மோட்டார் சைக்கிள் காத்தான்குடியில் மீட்பு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு பார் வீதியில் வைத்து கடந்த ஏழாம் திகதி காணாமல் போன மோட்டார் சைக்கிள், காத்தான்குடி கடற்கரையில் வைத்து நேற்று(15) மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பார் வீதியில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் கடந்த 07.08.2014 திகதி எட்டு மணியளவில் திருடப்பட்டதாக மோட்டார் சைக்கிள் உரிமையாளர் வைத்தியர் எம். ருதேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தான் சம்பவம் நடந்த உடனேயே மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாகவும் அதனடிப்படையில் அருகில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் மட்டக்களப்பு பொலிஸார் அறிவித்ததன் பிரகாரம் காத்தான்குடி பொலிஸார் இந்த மோட்டார் சைக்கிளை மீட்டெடுத்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளிலிருந்து அதன் பெட்டரி உட்பட மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் காணாமல் போயிருப்பதாகவும் திருடர்கள் மோட்டார் சைக்கிளுக்குச் சேதம் விளைவித்திருப்பதாகவும் வைத்தியர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பொலிஸார் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X