2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விடுதலைப்புலிகள் எம்மை துரோகிகள் என்றனர்: ஜயந்த களுபோவில

Thipaan   / 2014 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


தமிழீழ விடுதலைப்புலிகளால் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்ட அமைப்பே எமது இலங்கை மனித உரிமைகள் ஒன்றியமாகும் என இலங்கை மனித உரிமைகள் ஒன்றியத்தின் தலைவர் பேராசிரியர் ஜயந்த களுபோவில தெரிவித்தார்.

இலங்கை மனித உரிமைகள் ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான காத்தான்குடி அஸ்ஸஹீத் அகமது லெவ்வை மண்டபத்தில் கூட்டம் நேற்று(16) நடைபெற்றது.

அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற் கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இலங்கை மனித உரிமைகள் ஒன்றியமானது இந்த நாட்டின் சமதானத்துக்காக செயற்பட்ட ஓர் அமைப்பாகும். மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள், பிரச்சினைகளை தீர்த்து வைப்பதுடன் மக்களுக்கு அதிகாரிகளால் ஏற்படுத்தப்படுகின்ற பல்வேறு பிரச்சினைகளையும் எமது அமைப்பு தீர்த்து வைத்து வருகின்றது.

எமது ஒன்றியமானது இந்த நாட்டின் இறைமையை பாதுகாத்து வருவதுடன் சட்டத்தையும் ஒழுங்கையும் நீதியையும் நிலைநாட்டத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கி வருகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், வெளிநாட்டு அமைச்சு என்பவற்றின் ஆதரவுடன் எமது ஒன்றியம் செயற்;பட்டு வருகின்றது.

வெளிநாட்டு உதவிகளுடன் எமது ஒன்றியம் செயற்படவில்லை.  எமது நாட்டுக்கெதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தைக் கண்டித்து இலங்கைக்கு ஆதரவாக எமது ஒன்றியம் மிகப் பெரிய பேரணியொன்றையும் நடாத்தியது.

எமது ஒன்றியத்தின் வளர்ச்சிப்பாதையின் ஒரு கட்டமாக எதிர் வரும் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி இலங்கையில் சர்வதேச மாநாடு ஒன்றை நடாத்தவுள்ளோம்.

அந்த மாநாட்டில் உலகத்தின் 25 நாடுகளில் இருந்து பல்வேறு அமைப்புக்களையும் சார்ந்த 100 பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த மாநாடு சர்வதேச ரீதியாக நமது நாட்டுக்கு பெரும் புகழை ஏற்படுத்தும் என நினைக்கின்றோம்.
 
இந்த மாநாட்டை ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார். இதில் கலந்து கொள்ள வரும் உலக நாட்டின் பிரதிநிதிகள் இலங்கையின் வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளுக்கும் சென்று நாட்டின் அபிவிருத்தியை பார்வையிடவுள்ளனர்  என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த சந்திரப்பால மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.ஏ.எம்.ஹரீஸ் உட்பட அதன் முக்கியஸ்தர்கள் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X