2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

செப்டெம்பரில் கூத்து போட்டி

Gavitha   / 2014 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு மாவட்டத்தின் கூத்துப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தெரிவித்தார்.

முனைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள திறந்த வெளி அரங்கில் கூத்துப் போட்டியும் மட்டக்களப்பு நகரில் பரிசளிப்பு விழாவும் இடம்பெறவுள்ளது.

வடமோடி, தென்மோடி, சிந்துநடை, மற்றும் வசந்தன் கூத்து என்பன இக்கூத்துப் போட்டியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட 14 கலைக் கழகங்களிலிருந்து வடமோடிக் கூத்துக்காக 5 விண்ணப்பங்களும், தென்மோடிக் கூத்துக்காக 6 விண்ணப்பங்களும், சிந்துநடைக்காக 1 விண்ணப்பமும், வசந்தன்  கூத்துக்காக 5 விண்ணப்பங்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர்  தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X