2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வாகன புகையினால் வளி மாசடைதல் தொடர்பில் தெளிவூட்டும் செயலமர்வு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


வாகனப் புகை வெளியேற்றத்தால் வளி மாசடைதல் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுக்கு தெளிவூட்டும் செயலமர்வு சனிக்கிழமை (16) மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எல். பெரேரா  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றாடல் மற்றும் சூழல் பாதுகாப்பு அமைச்சின் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.

வளி மாசடைதலைத் தடுக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழல் பாதுகாப்பு செயற்திட்டங்கள் குறித்தும் இவற்றை உடனடியாக அமுல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், 2012ஆம்  ஆண்டிலிருந்து நாடு முழுவதும் சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்கமைவாக நாடு முழுவதுமுள்ள பொலிஸ்  அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுவதுடன்  வழிகாட்டல் செயலமர்வுகளும் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X