2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இம்மாத இறுதியில் பெரும்போகச் செய்கைக்கான கூட்டங்கள்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போகச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டங்களை இம்மாதம் 25ஆம் திகதி முதல் 29ஆம் திகதிவரை நடத்தி முடிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை (18) மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.

அந்த வகையில்,  மண்முனை மேற்கு - உன்னிச்சை, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான கூட்டம் வவுணதீவு பிரதேச செயலகத்தில் 25ஆம் திகதி காலை 10 மணிக்கு நடைபெறும்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உறுகாமம், கித்துள்வெவ, வெலிகாகண்டி, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான ஆரம்பக் கூட்டம் செங்கலடி பிரதேச செயலகத்தில் 26ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நடைபெறும்.

கோரளைப்பற்று தெற்கு வாகனேரி, புணானை, தரவை, வடமுனை, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான கூட்டம் கிரான் பிரதேச செயலகத்தில் 26ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும்.

கோரளைப்பற்று வடக்கு - கட்டுமுறிவு நீர்ப்பாசனம், மதுரங்கேணி, கிரிமிச்சை, சிறு நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான ஆரம்பக் கூட்டம் வாகரைப் பிரதேச செயலகத்தில் 28ஆம் திகதி காலை 10 மணிக்கு நடைபெறும்.

போரதீவுப்பற்று - நவகிரி, தும்பங்கேணி, சிறு நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான கூட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் 29ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நடைபெறும்.

மண்முனை தென்மேற்கு - கடுக்காமுனை, புழுக்குணாவி, அடைச்சகல், சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான ஆரம்பக் கூட்டம் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் 29ஆம் திகதி 2.30 மணிக்கு நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டது. 

கடந்த சிறுபோகம், வரவுள்ள 2014- 2015 பெரும்போகம், விவசாயிகளின் பிரச்சினைகள், விவசாயிகளுக்கான மேம்பாட்டுத்திட்டங்கள், நீர்ப்பாசனம், நெல் கொள்வனவு, உரம் வழங்குதல் போன்ற   விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன.

மேலும் இங்கு  விவசாயம், மீன்பிடி, கால்நடைப்பிரச்சினை, யானைப்பிரச்சினைகள், காடுகள் அழிப்பு எனப் பல பிரச்சினைகளும் ஆராயப்பட்டன.

இந்தக் கூட்டத்தில்  மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் பி.உகநாதன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் பொறியிலாளர் எஸ்.மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X