2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்து: நால்வர் படுகாயம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை (18) இடம்பெற்ற வாகன விபத்தில், நால்வர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலிருந்து அக்கறைப்பற்று நேக்கிச் சென்று கொண்டிருந்த பொத்துவில் டிப்போவுக்குச் சொந்தமான பஸ்வண்டியும் மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிக்குடிக்கு சென்று கொண்டிருந்த நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான பிக்கப் ரக வாகனமும் மோதியதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது பஸ்வண்டியில் பயணித்த ஒருவரும், பிக்கப் வாகனத்தில் பயணித்த சாரதி மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நவகிரிப் பிரிவுக்குரிய நீர்ப்பாசனப் பொறியியலாளர் எம்.மயூரன் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

தற்போது மேலதிக சிகிச்சைகளுக்காக ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X