2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆலய நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்
, எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு செல்வநாயகம் வீதியில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாகிகள் இன்று திங்கட்கிழமை (18) ஆலயத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த வருடம் 2013.10.27 அன்று மக்களினால் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.

ஏற்கெனவே இருந்த நிர்வாகத்திற்கு மண்முனை வடக்கு பிரதேச செயலாளரினால் கடந்த 2013.11.22 அன்று தபால் மூலக்கடிதத்தின் படி, ஆவணங்கள் மற்றும் கணக்கறிக்கை என்பவற்றை கையளிக்கும் படி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட அறிவித்தலுக்கமைவாக பழைய நிர்வாகம் ஆலய பொறுப்புக்களை தங்களுக்கு வழங்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை எதிர்வரும் புதன்கிழமை (20) ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X