2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்புக்கு வரட்சி நிவாரணம் வழங்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருளாதார அமைச்சுடன் இணைந்து உலக உணவுத் திட்டத்தின் கீழ் வரட்சி நிவாரணங்கள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சியினால் ஏற்பட்ட பாதிப்புகளை மீளாய்வு செய்யும் கூட்டம் திங்கட்கிழமை (18) மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

வரட்சியினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள், எதிர்கால ஏற்பாடுகள், தற்போதைய நிலைகள், எதிர்காலத்தில் பாதிப்புக்களைக் குறைப்பது பற்றி கலந்துரையாடப்பட்டது.

இவற்றைக் குறைப்பதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து ஆலோசனைகளும் பெறவேண்டும் என திட்டத்தில் முன்மொழியப்பட்டன.

இதன்போது மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருளாதார அமைச்சுடன் இணைந்து உலக உணவுத் திட்டத்தின் கீழ் வரட்சி நிவாரணங்கள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மாவட்ட அரச அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ், பொருளாதார அபிவிருத்தியமைச்சின் மேலதிகச் செயலாளர் மயாதுன்ன, மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுங்சழியன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்தவ நிலைய உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X