2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாணசபையின் குரலை இராணுவம் புறக்கணித்தது: எம்.எஸ்.சுபைர்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கரிமலையூற்று பள்ளிவாயல் தொடர்பாக கிழக்கு மாகாண சபையினால் ஜனநாயக ரீதியாக விடுத்த குரலை இராணுவம் புறக்கணித்துள்ளதாக கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (19) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் கரிமலையூற்று பள்ளிவாயல் மற்றும் அந்த கிராமம் தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியினால் கிழக்கு மாகாண சபையில் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த பள்ளிவாயலையும் கிராமத்தையும் மூன்று மாதங்களுக்குள் புனரமைத்து அதை பாதுகாப்பேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் கொடுத்த வாக்குறுதி இதன் மூலம் பொய்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் குரல் இராணுவத்தினரால் புறக்கணிப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மை முஸ்லிம் மக்களினால் வாக்களிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண சபையின் ஆட்சியில் அரசாங்கம் இவ்வாறான ஒரு சம்பவத்திற்கு பொறுப்புக் கூறாமல் மொனித்துப் போயிருப்பது கவலைளிக்கின்றது.

பள்ளிவாயல் மீள அமைக்கப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ஏ.எச்.எம்.அஸ்வர் கூறியுள்ளாரே தவிர அந்த பள்ளிவாயல் உடைத்தமைக்கு பொறுப்புக்கூறவில்லை. இனிவரும் காலங்களில் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய நிலைமை இன்று தோன்றியுள்ளது.

கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாக்களித்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை அமைத்துள்ள போதிலும் அந்த மாகாண சபையின் ஜனநாயக ரீதியிலான கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. அந்த மாகாண சபை உறுப்பினர்களே குறித்த பள்ளிவாயலை சென்று பார்க்க முடியாமல் தடுக்கப்பட்டுள்ளது.

உடனடியாக இந்த பள்ளிவாயலை புனரமைப்பு செய்வதுடன் குறித்த பள்ளிவாயலை மக்கள் பிரதிநிதிகள் சென்று பார்வையிடவும் அனுமதியளிக்கப்படல் வேண்டும்' எனவும் அவர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X