2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

குழாய் மூலம் குடிநீர் விநியோக திட்டம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல் 
 
 
மட்டக்களப்பு, படுவான்கரைப் பிரதேசத்தில் வருடாந்தம் நிலவும் வரட்சியையும், மக்களின் குடிநீர் பயன்பாட்டையும் கருத்தில் கொண்டு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தின் போரதிவுப்பற்றுப் பகுதி மக்களுக்காக, அம்பாறை மாவட்டத்திலுள்ள கொண்டவட்டுவான் மற்றும் கீமத்துறுவா ஆகிய குளங்களிலிருந்து நீர் சுத்திகரிக்கப்பட்டு குழாய் மூலம் விநியோகிக்கப் படவுள்ளதாகவும், இதற்காக 3000 மில்லியன் ரூபாய் நிதி  ஒதுக்கீடு செய்துள்ளதாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்கு பிரதேச மக்களின் குடிநீர் பிரச்சினையை கருத்தில் கொண்டு, உன்னிச்சைக் குளத்திலிருந்து 1600 மில்லியன் ரூபாய் செலவில் குழாய் மூலம் குடிநீரை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X