2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மின்னல் தாக்கியதில் சிறுவனுக்கு அதிர்ச்சி

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 19 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
 
மட்டக்களப்புப் பிரதேசத்தில் இன்று மாலையிலிருந்து இடி மின்னலுடன் மழையும் பெய்துகொண்டிருக்கின்றது.
 
சற்று முன்னர் ஏறாவூர்- தளவாய் பகுதியில் இடி மின்னல் தாக்கியதில் ஒன்பது வயதுச் சிறுவன் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.
 
தளவாய் கிராமத்தைச் சேர்ந்த கே. ராஜு என்ற சிறுவனே இடி, மின்னல் தாக்கத்தில் அதிர்ச்சிக்குள்ளானவராகும். எனினும் சிறுவனின் நிலைமை ஆபத்துக்குள்ளாகவில்லை என்று வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X