2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வரட்சிக்கு நீர் விநியோகிக்க பவுஸர், நீர்த்தாங்கிகள் கையளிப்பு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு, செங்கலடி - பதுளை வீதியிலுள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் வேலைத்திட்டத்திற்கென பவுஸர் வாகனம் மற்றும் நீர்த்தாங்கிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏறாவூர்பற்று வேர்ல்ட் விஷன் பிராந்திய அபிவிருத்தி திட்ட அமைப்பின் ஏற்பாட்டில் நீர் வழங்கல் செயற்திட்டத்தின் கீழ் கொடுவாமடு தொடக்கம் புல்லுமலை வரையிலான பிரதேசத்திற்கு இந்த பவுஸர் மூலம் குடிநீர் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏறாவூர் பற்று வேர்ள்ட் விஷன் பிராந்திய அபிவிருத்தி திட்ட இணைப்பாளர் என். அமலன் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச சபையின் நீர் வழங்கலுக்கான உத்தியோகத்தர் திருமதி. கே.ஜோன்பிள்ளை முகாமைத்துவ உத்தியோகத்தர் வீ.பற்குணம் மற்றும் வேர்ல்ட் விஷன் அமைப்பின் உத்தியோகஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X