2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அளுத்கமை மக்களுக்கு நிதியுதாவி

Super User   / 2014 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
அளுத்கமை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் சேகரிக்கப்பட்ட 18 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நிதி செவ்வாய்க்கிழமை (19) கைளிக்கப்பட்டதென சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.சபில் நழீமி தெரிவித்தார்.
 
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் தலைமையில் அளுத்கமைக்கு விஜெயம் செய்த சம்மேளன குழுவினர் இந்த நிதியை அளுத்கம ஜம் இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் அஸ்ஸெய்ஹ் எம்.பர்ஹான் நழீமியிடம் கையளித்தனர்.
 
இதன் போது அளுத்கமை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளன செயலாளர் ஏ.எல்.எம்.சபில் நழீமி உட்பட சம்மேளன முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
 
அளுத்கமை மற்றும் பேருவல பிரதேசங்களில் இடம் பெற்ற அசாதரண சூழ் நிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் காத்தான்குடி பகுதியில் வீடு வீடாக சென்று இந்த நிதியை சேகரித்தமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X