2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தொற்று நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

George   / 2014 ஓகஸ்ட் 20 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையில், இரண்டாம் சுகாதாராத்துறை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கால் நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை (19) மட்டக்களப்பு  மண்முனை தென் எருவில்பற்று (களுதாவளை) பிரதேச சபையில் நடைபெற்றது.

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் (களுதாவளை) செயலாளர் திருமதி யாகேஸ்வரி வசந்தகுமாரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், களுவாஞ்சிகுடி கால்நடை வைத்திய அதிகாரி என்.முகுந்தன், களுவாஞ்சிகுடி பொதுச் சுகாதார பரிசோதகர் கே.குபேரன், பிதேச சபையின் முகாமைத்துவ உதவியாளர் கே.இராஜரெத்தினம், உட்பட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பண்ணையாளர்கள், கிராம அpபவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்விழிப்புணர்வு நிகழ்வின்போது, கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள், அவற்றினைத் தடுக்கும் முறைகள், கால்நடைகளைப் பராமரிக்கும் முறை, சுகாராத பழக்க வழங்கங்கள், நிலக் கீழ் தண்ணீர் பயன்பாட்டு முறைமை, திண்மக் கழிவகற்றல் உட்பட பல்வேறு விடயங்கள்  தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X