2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கறுத்தார்முறிக்குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவு, இலுப்படிச்சேனை கிராமத்திலுள்ள கறுத்தார்முறிக்குளத்தை புனரமைக்கும் வேலைத்திட்டம் புதன்கிழமை(20) ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இக்குளம் 14 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளது.

இதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரி.நிர்மல்ராஜ் ஆகியோர் ஆரம்பித்துவைத்தனர்.

இக்குளம் புனரமைக்கப்பட்டால் குளத்தை அண்டிய பகுதி மக்களுக்கு பெரும் உதவியாக அமையும் என விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

மேலும், வேளாண்மை வயலுக்கு பெரும்போகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் குறிப்பிட்ட சில ஏக்கர் வயல் காணிகளுக்கு தண்ணீர் பாச்சமுடியும் எனவும், தோட்டப் பயிர் செய்கைக்கும் உதவுவதுடன், வரட்சி காலத்தில் குளத்தை அண்டிய கிணறுகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X