2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மனித எலும்பு மீட்பு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பட்டிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரியாவெளியில் உள்ள வயல் பகுதிகளில் இருந்து புதன்கிழமை (20) மனித எலும்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெயர் மற்றும் புகைப்படம் அழிந்த நிலையில் அடையாள அட்டையும் எரிந்த நிலையில் துவாய் மற்றும் சேட் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி அப்துல் ரியாழ் விசாரணைகளை மேற்கொண்டார். மீட்கப்பட்ட எலும்பு மனிதரின் கை எலும்பாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இந்த எலும்புகள் அண்மையில் இப்பகுதியில் மீட்கப்பட்ட மண்டையோட்டின் பகுதியாக இருக்கலாம் என தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X