2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பாசியால் சிரமப்படும் மீனவர்கள்

Super User   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு வாவியில் பாசிகள் நிறைந்து காணப்படுவதால் நன்னீh மீன்பிடியின் போது தாம் சிரமங்களை எதிர்நோக்குவதாக  மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக வாவியின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதால், மீன்கள் மிக  குறைந்த அளவிலே பிடிப்படுவதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், பாசிகள் அதிகம் உற்பத்தியாவதனால் வாவியில் வலையை வீசும் போது மீன்களுக்கு பதிலாக பாசிகளே வலையில் பிடிபடுவதாகவும் கவலை தெரிவித்தனர்.

இது குறித்து மாவட்ட கடற்றொழில் திணைக்களத்திற்கு அறிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டனர். 

இங்கு நன்னீர் மீன்பிடியை நம்பி  13,000 மீனவ குடும்பங்கள் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X