2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

குசலானமலையிலிருந்து மோட்டார் குண்டு மீட்பு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவில் உள்ள குசலான மலைக் காட்டில் இருந்து நேற்று புதன்கிழமை மாலை 6 மில்லிமீற்றர் நீளமுடைய மோட்டார் குண்டொன்றை கண்டெடுத்ததாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

விஷேட புலனாய்வு பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து இந்த குண்டு மீட்கப்பட்டது.

காட்டுப் பகுதியில் நிலத்திற்கு மேலே வெளியில் தெரியக்கூடியதாக இந்த குண்டு கிடந்துள்ளது என்று கூறிய பொலிஸார், இது எல்.ரீ.ரீ.ஈ காலத்தில் அவர்களால் பயன்படுத்தப்பட்ட பழைய குண்டாக இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

குண்டு செயலிழக்கச் செய்யும் விஷேட அதிரடிப்படையினர் மூலம் இந்தக் குண்டை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X