2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உல்லாச பயணிகளின் துவிச்சக்கர சவாரி

Super User   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எஸ்.பாக்கியநாதன்


அமைதியானதும் பயமற்றதுமான சூழல் நாட்டில் காணப்படுவதன் காரணமாக வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் துவிச்சக்கரவண்டியில் சவாரி செய்ததை இன்று வியாழக்கிழமை (21) மட்டக்களப்பு, பாலமீன் மடுவில் காணமுடிந்தது.

ஜேர்மனிய மற்றும் பிரித்தானிய உல்லாசப் பயணிகள் துவிச்சக்கர வண்டியில் சென்று மட்டக்களப்பின் மரபுரிமை இடங்களான ஒல்லாந்தர் கோட்டை, அங்கிலிக்கன் தேவாலயம், மட்டக்களப்பு கேற், என்பவற்றைப் பார்வையிட்டு பாலமீன் மடுவில் உள்ள வெளிச்ச வீட்டையும் பார்ப்பதற்காக வந்துள்ளதாக தெரிவித்தனர்.

அறுகம்பையிலிரந்து  செவ்வாய்க்கிழமை (19) புறப்பட்ட இவர்கள் நேற்று புதன்கிழமை (20) கல்முனையில் தங்கி இன்று வியாழக்கிழமை (21) காலை மட்டக்களப்பை வந்தடைந்ததாகக் கூறினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X