2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கொரியா அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மட்டக்களப்புக்கு விஜயம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 21 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்
,எம்.ரீ.எம்.பாரிஸ்

மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேசத்திற்கு கொரியா அரசாங்கத்தின்  பிரதிநிதிகள் வியாழக்கிழமை (21) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

கொரியா அரசாங்கத்தின் நிதி உதவியோடு கோறளைப் பற்று வாழைச்சேனை, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைகளின் எல்லைகளுக்குள் வடிகான்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இவற்றின் பயன்பாடு தொடர்பான கள ஆய்வினை மேற்கொள்வதற்காக கொரியா அரசாங்கத்தின் உயர்மட்ட நிபுணர் குழுவினால் இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இவர்கள் பிரதேச சபைக்கு வருகை தந்து சபை செயலாளருடன் திட்டத்தின் பலாபலன்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக ஆராய்ந்ததோடு திட்ட நிர்மாண வேலைகளையும் நேரடியாகச் சென்று பார்வையிட்டதாக சபைச் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தின் தெரிவித்தார்.

இதன்போது கொரியவின் வெளிநாட்டு உறவுகள் நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர்களான லீடு கூஇ சூன் ஜீன் மற்றும் கொரியாவின் சூழல் மற்றும் அபிவிருத்தி ஆய்வு நிலையத்தின் தலைவர் சூடொங் ஜின் ஆகியோர்கள் இந்நிபுணர்கள் குழுவில் பங்குபற்றியிருந்தார்கள்.

இத்திட்டத்திற்கென கிரான், கண்ணன் கிராமம், சந்திவெளி போன்ற முக்கியமான பிரதேசங்கள் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்படும் பிரதேசங்களாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளதாக செயலாளர் தெரிவித்தார்.

இதற்கான திட்ட விரிவாக்கல் நடவடிக்கைக்காக கொரியா அரசாங்கத்தின் நன்கொடையாக 3.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X