2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம்' வவுணதீவில் ஆரம்பித்து வைப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


கிராமங்களை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் 'கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம்' வவுணதீவு பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட விளாவெட்டுவான் கிராமத்தில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனால் வியாழக்கிழமை(22) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின்கீழ் 10 இலட்சம் ரூபா செலவில் பொது விளையாட்டு மைதானத்திற்கான சுற்றுவேலி அமைப்பதற்கான அடிக்கல்லை பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் இதன்போது நாட்டி வைத்தார்.

இந்நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பி.ரவீந்திரன், திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ரி.நிர்மல்ராஜ், மீள்குடியேற்ற அதிகாரசபை பணிப்பாளர் எஸ்.சத்தியவரதன், பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஜி.ருத்ரமலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சதீஸ்குமார் மற்றும் விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X