2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஏழு உடும்புகளுடன் கிராமவாசி கைது

Super User   / 2014 ஓகஸ்ட் 22 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பகுதியில் ஏழு உடும்புகளுடன் கிராமவாசியொருவரை இன்று வெள்ளிக்கிழமை (22) கைதுசெய்துள்ளதாக  வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

மண்டூர், மருங்கையடிப்பூவல் கிராம வாசியான எஸ்.பொன்னுத்துரை என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவரை நீதி மன்றில் ஆஜர்செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெல்லாவெளிப் பொலிஸார் மேலும் கூறினர்.

இலங்கையில் மனிதர்கள் இறைச்சிக்காக உடும்புகளைப் பிடித்து உண்பதால் உடும்பு இனங்கள் அருகி வருவதாகவும் அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சூழலியலாளர்கள் வாதிடுகின்றனர்.

இந்நிலையிலேயே சமீபகாலமாக உடும்புகளை இறைச்சிக்காக பிடிப்போரைப் பொலிஸார் கைது செய்து நீதி மன்றங்களில் ஆஜர்படுத்தி சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X