2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிறுவர் உரிமைகள் கண்காணிப்பு குழு உறுப்பினர்களுக்கான கருத்தரங்கு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


நல்லிணக்க ஆணைக்குழுவின் (எல்.எல்.ஆர்.சி) பரிந்துரைக்கமைய இரு இனங்களுக்கிடையில் நல்லுறவைப் பேணும் வகையில் பிரதேச செயலகப் பிரிவுதோரும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் சிறுவர் உரிமைகளை மேம்படுத்தும் நோக்கில் கோறளைப்பற்று மற்றும் ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த கிராமிய மட்ட சிறுவர் உரிமைகள் கண்காணிப்பு குழு உறுப்பினர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை (22) கோறளைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் வளவாளராக சிறுவர் உரிமை மேம்பாட்டு திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் வீ.குகதாசன் கலந்து கொண்டதுடன் இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த சிறுவர் உரிமைகள் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் முப்பது பேர் கலந்து கொண்டனர்.

கோறளைப்பற்று மற்றும் ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் பாலர் பாடசாலை ஆசிரியர்கள், சிறுவர் கழகங்கள், பெற்றோர் ஆகியோருக்கு ஐந்து கட்டமாக கருத்தரங்குகள் இடம்பெற்று, இறுதியில் வீதி நாடகமும் இடம் பெறவுள்ளதாக கோறளைப்பற்று பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.அழகுராஜ் தெரிவித்தார்.

நன்நடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களான ஏ.அழகுராஜ், எம்.எப்.காஸிம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.









  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X