2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பெண்களின் செல்வமும் செல்வாக்கும் கிராம மட்ட செயற்பாடு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 23 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் சேவ் த சில்ரன் நிறுவனத்தின் அனுசரணையில், மட்டக்களப்பு வை. எம்.சி.ஏ இன் அமுலாக்கத்தில் இலங்கையில் நலிவுற்ற பெண்களை வலுவூட்டும் திட்டத்தின் கீழ் 'முன்னேற்றத்தை நோக்கி' என்னும் கருப்பொருளிலான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று- செங்கலடி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள  சவுக்கடி கிராமத்தில் பெண்களின் செல்வமும் செல்வாக்கும் எனும் கருப்பொருளில் இயங்கி வரும் 'ஒளி விளக்கு' குழுவானது கிராம மட்ட செயற்பாடு ஒன்றினை வெள்ளிக்கிழமை (22) நடத்தியிருந்தது.

இதன்போது பெண்கள் தங்கள் திறமைகளின் வெளிப்பாடான பனை உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தியதோடு தங்கள் கிராமத்தை முன்னேற்றும் முகமாக ஒரு பனை ஓலை தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றை நிறுவுவதற்குரிய மனுவினையும் பிரதேச செயலாளர் மற்றும் பனை அபிவிருத்தி சபை இணைப்பாளரிடமும் கையளித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் பெண்கள் உரிமைகள், பால்நிலை சமத்துவம் மற்றும் தொழில் வழிகாட்டல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக செங்கலடி பிரதேச செயலாளர் யு.உதயசிறிதர் மற்றும் சிறப்பு அதிதிகளாக பனை அபிவிருத்தி சபையின் மட்டக்களப்பு இணைப்பதிகாரி எஸ்.விNஐந்திரன், கிராம உத்தியோகத்தர் ஆர். சயனொளிபவன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்   எஸ்.ரஐPவகுமாரன்,  சேவ் த சில்ரன் நிறுவன திட்ட முகாமையாளர் ஜே.கிருஷாந்தன் மற்றும் வை.எம்.சி.ஏயின் உத்தியோகத்தர்களாக எம்.பிரசாந்தினி, கி.லாவண்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X