2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பிரயாணிகளுக்கான ஜும் ஆ பள்ளிவாசல் திறப்பு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 23 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியிலுள்ள மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் பிரயாணிகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட  முதலாவது ஜும் ஆ பள்ளிவாசல் வெள்ளிக்கிழமை (22) திறந்து வைக்கப்பட்டது.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரணையுடன் சவுதி அரேபியாவின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த ஜும் ஆ பள்ளிவாசல் திறந்து வைக்கப்பட்டு முதலாவது ஜும் ஆ பிரசங்கம் மற்றும் ஜும் ஆ தொழுகையை மௌலவி எம்.முஜீப் மதனீ நடாத்தி வைத்தார்.

இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியைமச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், சவுதி அரேபிய றாபியா நிறுவனத்தின் ஆசிய நாடுகளுக்கான பணிப்பாளர் அஸ்ஸெய்ஹ் சாலிஹ் பின் தாவூத், ஹிறா பவுண்டேனசன் நிறுவனத்தின் செயலாளர் அஸ்ஸெய்ஹ் மும்தாஸ் மதனீ, காத்தான்குடி ஜம்மியத்துல் உலமா சபை தலைவரும் காத்தான்குடி காதி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியா, காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.அலி சப்ரி, சவுதி அரேபிய முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X