2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஒவ்வொரு உத்தியோகத்தரும் வீட்டுத்தோட்டம் செய்ய வேண்டும்: காத்தான்குடி பிரதேச செயலாளர்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடமைபுரியும் ஒவ்வொரு உத்தியோகத்தரும்  வீட்டுத்தோட்டமொன்றை செய்ய வேண்டுமென காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் நேற்று (22) தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் மேற்கொள்ளப்படவுள்ள திவிநெகும ஆறாம் கட்டம் தொடர்பாக ஆராயும் கூட்டம் காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற போது அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே பிரதேச செயலாளர் முசம்மில் மேற் கண்வடவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடமைபுரியும் ஒவ்வொரு அதிகாரியும் வீட்டுத்தோட்ட செய்கையில் ஈடுபட வேண்டும்.
நமக்கு தேவையான காய்கறிகள், பச்சை மிளகாய் மற்றும் பழ வகைகள் என்பவற்றை நாமே உற்பத்தி செய்ய வேண்டும்.

அதற்காக காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடமை புரியும் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் இதற்கான அறிவுரைகளை விடுக்க விரும்புகின்றேன்.

திவிநெகு திட்டம் தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அனுப்பப்படும் அனைத்து சுற்றறிக்கைகளையும் உத்தியோத்தர்கள் கவனத்திற் கொண்டு சிறப்பாக இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.கருணாகரன், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் ஏ.கோமலேஸ்வரன், காத்தான்குடி மற்றும் கொக்கட்டிச்சோலை பிரதேசங்களுக்கான விவசாய பெரும்பாக உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பாயிஸ், காத்தான்குடி விவசாய போதனாசிரியர் திருமதி குந்தவை ரவிசங்கர், காத்தான்குடி பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி தலைமையக முகாமையாளர் திருமதி எஸ்.பாத்தும்மா பரீட் உட்பட கிராம உத்தியோகத்தர்கள், மற்றும்  அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது திவிநெகு திட்டத்தின் ஆறாம் கட்டத்தை காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் மேற்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டதுடன் அதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X